பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக பெற்றோரில் ஒருவரே இருக்கிறார்.
தமிழகத்தில் பள்ளி மேலாண்மை குழு செயல்படும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், தலா ஒரு தலைமை ஆசிரியர்,
பள்ளி மேலாண்மை குழு தலைவர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவரின் பெற்றோர், என ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 3 பேர் வீதம் 1 லட்சத்து 20ஆயிரம் பேருக்கு 4,088 இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்காக 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள், பாலின பாகுபாடு களைதல், பேரிடர் மேலாண்மை, தரமான கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சமூக தணிக்கை, சுகாதாரம் பேணுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் பயிற்சி துவங்கும்,என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








