பெண்களின் பயணங்கள் பாதுகாப்பானதாக அமைய, மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிச் சொல்கிறார், பேராசிரியர் மு.சு.கண்மணி.* ''செல்ல வேண்டிய இடத்தின் முகவரி, சந்திக்க வேண்டிய நபரின் தொடர்பு
* செல்லவேண்டிய முகவரி எந்தப் பகுதியில் உள்ளது, அங்கே ஆட்டோ, பேருந்து அல்லது காரில் செல்ல எவ்வளவு நேரமாகும், எவ்வளவு கட்டணம் கேட்பார்கள் போன்ற விவரங்களைப் புறப்படும் முன் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, போவோர் வருவோரிடமும், ஆட்டோகாரர்களிடமும் முகவரியைக் காட்டி வழி கேட்காதீர்.
* படிப்பு விஷயமாகச் செல்லும் மாணவிகள், படிக்கும் கல்வி நிறுவனத்தின் ஐ.டி. கார்டு எடுத்துச் செல்லவும்.* ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஐ.டி-கள், தலைவலி, இருமல், ஜலதோசம், காய்ச்சலுக்கான மருந்துகள் மற்றும் சானிட்டரி நாப்கின்களை எப்போதும் கையோடு வைத்திருக்க வேண்டும்.
* தண்ணீர் பாட்டில், மழை நேரமாக இருந்தால் குடை அவசியம்.
* உடல் நலக்குறைவு, நீண்ட நாள் மருந்து சாப்பிட்டு வரும் பெண்கள், முதிய பெண்மணிகள் கைப்பையில் தங்கள் மருந்துகளுடன் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் வைத்திருக்கவும். மயக்கம், திடீர் உடல்நலக் குறைவு போன்ற சூழல்களில் தனக்கு உதவ வருபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய குடும்பத்தினரின் தொலைபேசி எண்ணையும், மெடிக்கல் ரிப்போர்ட்டில் பிரதானமாக எழுதி வைக்கவும்.
* முன் பின் இருக்கையில் உள்ளவர்களின் தன்மை எப்படிஎனத் தெரிந்துகொள்ளவும். சரியில்லையென்றால் இடம் மாறி உட்கார்ந்துகொள்ளலாம்.
* பேருந்து இடை நிற்கும்போது, எவ்வளவு நேரம் நிற்கும் என்பதையும் போகும் இடத்துக்கும் வண்டிக்கும் எவ்வளவு தூரம் என்பதையும் தெரிந்துகொள்ளவும்.
* தங்க நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்க்கவும்.
* சர்க்கரை நோயாளி என்றால் சர்க்கரை, சாக்லேட் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
* தேவையான தண்ணீர் அருந்தாததால் உடலில் நீர்வறட்சி ஏற்படுவது (டிஹைட்ரேஷன்), சாப்பிடாமல் இருப்பது போன்ற சூழல்கள் மயக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், அதற்கு வாய்ப்பளிக்காமல் இருக்கவும்.
* பயணத்தின்போது அநாவசியமாக யாரிடமும் பேச வேண்டாம். அலைபேசியில் பேசும்போது, செல்லும் இடம், பயணத்தின் நோக்கம் போன்றவற்றையோ, பிற தகவல்களையோ சக பயணிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் சத்தமாகப் பேச வேண்டாம்.
* பேருந்து நிற்கும் இடங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை வாங்கிச் சாப்பிட வேண்டாம். தேவையான உணவை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லவும். அறிமுகமில்லாத சக பயணிகள் தரும் உணவுப் பொருட்களையும் தவிர்த்துவிடவும்.
* பேருந்து, ரயில், ஆட்டோ என ஏறி அமர்ந்தவுடன், சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத வண்ணம் செல்போனில் மூழ்கிவிடக் கூடாது. உடைமைகளைப் பறிகொடுப்பதில் இருந்து, நீங்கள் குனிந்த தலை நிமிராமல் வருவதைப் பயன்படுத்தி, நீங்கள் செல்ல வேண்டிய ரூட்டில் இருந்து விலகி, ஆட்டோ, கால் டாக்ஸி டிரைவர் உங்களைக் கடத்திச் செல்வதுவரை எதுவும் நடக்கலாம் ஜாக்கிரதை.
* போகும் ஊரில் உள்ள அவசர உதவி எண்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
* சில சந்தர்ப்பங்களில், காவல்துறையின் நடவடிக்கைக்கோ, விசாரணைக்கோ உட்படுத்தப்பட்டால் பதறாமல், அச்சம் கொள்ளாமல் அவர்கள் கேட்கும் அடையாள அட்டைகள், விவரங்களை நிதானமாகச் சொல்லவும். தேவைப்பட்டால் அப்பா, அம்மா, கணவர், சகோதரர் அல்லது அருகில் இருக்கும் உறவினர், நண்பர்கள் என தகவல் சொல்லி வரவழைக்கவும்."
* பயணத்தின்போது சுடிதார் போன்ற வசதியான உடையை அணிந்துகொள்ளவும்.
*அதிக வெயிட் உள்ள பைகளைக் கொண்டுசெல்லாமல் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கட்டும்.
* பேருந்தின் ட்ராக்கிங் எண்ணைத் கேட்டு வாங்கி, அதை செல்லும் இடத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவித்துவிட்டால், நாம எந்த இடத்தில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். விபத்து நடந்தாலும் தெரிந்துவிடும்.
* இறங்கும் இடத்தில் யாருடனும் , தைரியமான முக பாவனையுடன் அணுக வேண்டும்.
பெண்கள், இந்தப் பாதுகாப்பான நடவடிக்கைகளைப் பின்பற்றினால், பயணத்தில் பயப்படத் தேவையில்லை.








