10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.'மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு
தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்,இன்று முதல், மார்ச், 7 வரை
http:/www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்
செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி
தெரிவித்துள்ளார்.







