Flash NEWS:- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு!!
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக எம்ஏஎக்கள் அனைவரும்
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என தமிழக கல்வி அமைச்சர் மாஃபா
பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாண்டியராஜன்,
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளேன். மேலும், பல அமைச்சர்கள் இங்கு வருவார்கள். அனைத்து எம்எல்ஏக்களும் இங்கு வருவார்கள் என்று கூறினார்.
பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கும் திமுகவுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக இருக்கும்.
பிளவு ஏற்படக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பம் என்று பாண்டியராஜன் கூறினார்.







