சிபிஎஸ்இ 10, +2-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்
நாடு முழுவதும் மொத்தம் 8.86 லட்சம் மாணவ-மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த முறையைக் காட்டிலும் 15.73 சதவீதம் அதிகரித்துள்ளது. 12-ஆம் வகுப்புத் தேர்வை மொத்தம் 10.98 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இந்த முறை 2.82 சதவீதம் அதிகரித்துள்ளது.








