சிக்ஸ் பேக் உடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு எளிய முறையான
உடற்பயிற்சிதான் காரணம், அதற்காக கஷ்டப்பட வேண்டியதில்லை என ரொனால்டோ
கூறியுள்ளார்.இதற்காக அயராது உடற்பயிற்சி, உணவுக்கட்டுபாடு என தங்களது உடலை வாட்டி வதைக்கிறார்கள். ஆனால் கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது உடலை ரப்பர் போன்று வைத்துள்ளார். அவர் எப்படி தனது உடலை பாதுகாக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு நான் அதிக அளவில் உடற்பயிற்சி எடுப்பதில்லை என்று ரொனால்டோ கூறியுள்ளார்.
அப்போது நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் சிட்-அப்ஸ் (உட்கார்ந்து எழுந்திருத்தல்) செய்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் ‘‘நான் வாரத்திற்கு 4 அல்லது 5 முறை சிட்-அப்ஸ் எடுப்பேன். ஆனால் அது 200-ல் இருந்து 300 வரைதான் இருக்கும். என்னுடைய உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு பராமரிப்புதான் முக்கிய காரணம். நீங்கள் அதிக முறை சிட்-அப்ஸ் செய்யும்போது குடல் இறக்கம் மற்றும் சில உபாதைகள் வரலாம். ஆகவே, அதிக முறை சிட்-அப்ஸ் செய்வதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். உடலுக்கு முன் மற்றும் பின் புறத்திற்கு தேவையான அடிப்படை உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஆனால், 3000 என்பது இல்லவே இல்லை. நான் வாரத்திற்குக்கூட 3000 ஆயிரம் சிட்-அப்ஸ் எடுக்க மாட்டேன்’’ என்று கூறினார்.








