பட்ஜெட் விலையில் செல்ஃபி பிளாஷ் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்:
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் புதிய பட்ஜெட் ரக
ஸல்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அக்வா பிரைம் 4ஜி என
பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு அதிக முக்கியத்துவம்
வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,000 என்ற
பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்டெக்ஸ்
அக்வா பிரைம் 4ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி
பிளாஷ், ஆட்டோ போகஸ், மற்றும் 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் மூன்று வித நிறங்களில்
கிடைக்கிறது.
சிறப்பம்சங்களை
பொருத்த வரை 5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1280x720 பிக்சல்
ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ, 1.0 ஜிகாஹெர்ட்ஸ்
குவாட்கோர் மீடியாடெக் M6735 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1 ஜிபி
ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும்
வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
2800 எம்ஏஎச் திறன்
கொண்டுள்ள இன்டெக்ஸ் அக்வா பிரைம் 4ஜி டூயல் சிம் ஸ்லாட், 4ஜி, வோல்ட்இ,
வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்
வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,500 என
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.