PG TRB TNTET VACANT DETAILS: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 21 March 2017

PG TRB TNTET VACANT DETAILS:

PGTRB - 825 பேருக்கு புதிதாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணி!250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி வரும்கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும். 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம்உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) உருவாக்கப்படும். அதேபோல், ஓர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல்) தோற்றுவிக்கப்படும். அந்த அடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள் வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும்போது ஒரு பள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம் மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறையிலும் (ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்) நிரப்பப் படுகின்றன. எனவே, புதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரிஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375 இடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையிலும்,முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது புதிதாக உருவாகியுள்ளபட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்த தேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H