பழைய மனை விற்பனை பதிவுக்கு மீண்டும் தடை பதிவுத்துறை உத்தரவால் அதிர்ச்சி
அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் விற்பனையை பதிவு செய்ய விதிக்கப்பட்டி
ருந்த தடையை, உயர் நீதிமன்றம் தளர்த்தியும், அதை அமல்படுத்துவதை
பதிவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இது, பொதுமக்களை அதிர்ச்சி அடையச்
செய்துள்ளது.
விவசாய
நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவுக்கு, 2016
செப்., 9ல் தடை விதித்தது.
முடக்கம் :
இதனால் வீடுகள்,மனைகள் விற்பனை தொழில் முற்றிலும் முடங்கியது. தடையை நீக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு,

மார்ச், 28ல், மீண்டும் விசாரணைக்கு வந்த போது, '2016 அக்.,
20க்கு முன், வீட்டுமனையாகபதிவு செய்யப்பட்ட மனைகளின் விற்பனையை, பதிவு
செய்யலாம்' என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பதிவு சட்டத்தில், 22ஏ பிரிவில் செய்த திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக, 2016 அக்., 20ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, உயர்நீதிமன்றம் ஏற்றது. அதனால், இந்த நிதியாண்டிற்குள் விற்பனையை பதிவு செய்ய, ஏராளமானோர் சார் - -பதிவாளர் அலுவலகங்களை அணுக துவங்கி உள்ளனர்.
ஆனால், பதிய முடியாது என, அதிகாரிகள் திருப்பி அனுப்புவதால், பழைய வீட்டுமனைகளை விற்க முயன்றோர் மீண்டும் கவலை அடைந்துஉள்ளனர். இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: உயர் நீதிமன்றம் விதித்த தடையை மீறி நடந்த, அங்கீகாரமில்லா மனைவிற்பனை பதிவுகள் தொடர்பான வழக்கால், பதிவுத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதன் விபரங்களை கேட்டு, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மண்டல அலுவலகங் கள் வாயிலாக அறிக்கை பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடைஉத்தரவில் சில பகுதிகள்

சிக்கல் :

தளர்த்தப்பட்டதை அமல்படுத்தினால், இதற்கு முன் நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, உயர் நீதிமன்ற புதிய உத்தரவின்படி, வீட்டு மனை விற்பனை பதிவு குறித்து, பதிவுத்துறை, ஐ.ஜி., கருத்துரை வரும் வரை, பத்திரப்பதிவுகளை நிறுத்தி வைக்க, மண்டல துணை, ஐ.ஜி.,க்கள், சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால், பதிவுகளை செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உத்தரவு :