போலி பணி நியமன ஆணை விவகாரம்: தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு:
போலி பணி நியமன ஆணை விவகாரத்தில் தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீது மேலும் 4 பேர் புகார் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பள்ளியில் போலி நியமன ஆணை மூலம்
பணியில் சேர முயன்ற மகேஸ்வரி, அவரது தம்பியுடன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் நியமன ஆணைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முத்துலட்சுமி, மேல்மட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயகுமார், வடமணப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை புனித வதி ஆகியோர் போலி நியமன ஆணை மூலம் பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மீது ஆரணி அருகே உள்ள வாழப்பந்தல் போலீஸ்
நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் முத்துலட்சுமி, புனிதவதி, விஜயகுமார் ஆகிய 3 பேரும்
தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் நியமன ஆணைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முத்துலட்சுமி, மேல்மட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் விஜயகுமார், வடமணப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியை புனித வதி ஆகியோர் போலி நியமன ஆணை மூலம் பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.
போலி நியமன ஆணை விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஆவணியாபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சக்தி வேல், ஆரணி அருகே உள்ள விளை அரசு பள்ளியில் மாற்றுப்பணியில் (டெபுடேஷன்) வேலை பார்க்கும் தமிழ் ஆசிரியர் சக்கரபாணி ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
Advertisement: Replay Ad
|
தலைமை ஆசிரியர் சக்திவேல் தற்போது தலைமறைவாக உள்ள ஆசிரியை முத்துலட்சுமியின் கணவர் ஆவார். அவர் மனைவி என்பதால் முத்துலட்சுமியின் ஆணையை சரியாக ஆய்வு செய்யாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து முத்துலட்சுமியை பணியில் சேர்த்துள்ளார்.
ஆசிரியை புனிதவதி பணியில் சேரவும் சக்திவேல் உடந்தையாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சக்திவேல் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக அவர் மீது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைதான சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த மகேஸ்வரியிடம் ரூ. 3½ லட்சம் வாங்கிக் கொண்டு போலி பணி ஆணை வழங்கியது தமிழ் ஆசிரியர் சக்கரபாணி என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவர் மீது நேற்று மேலும் 4 பேர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர். விழுப்பு ரத்தை சேர்ந்த வசந்தா, நீல கிரியை சேர்ந்த காந்திமதி ஆகியோரிடம் பணி மாறுதல் ஆணை பெற்று தருவதாக சக்கரபாணி பணம் பெற்றுள்ளார்.
இதேபோல ஆரணியை சேர்ந்த ரவிசங்கர், மேல்பாலூரை சேர்ந்த பாண்டு ஆகியோரிடம் பணி நியமன ஆணை பெற்று தருவதாக கூறியுள்ளார். இவர்கள் 4 பேரிடமும் ஆசிரியர் சக்கரபாணி லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
சக்கரபாணி மீதான தொடர் புகார் காரணமாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அடுத்த கட்ட விசாரணைக்காக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வருமாறு சக்கரபாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.