ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. இதன் பின் ஜியோ பயன்படுத்துவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை முதல் ஜியோ கட்டண சேவைகள் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜியோ
இலவசங்கள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்சமயம் வரை 5 கோடி பேர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.
முதலில் ஜியோ பிரைம் திட்டத்துடன் எத்தனை பேர் கூடுதல் சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர், பின் எத்தனை பேர் ஜியோவை தவிர்த்து மற்ற சேவைகளை பயன்படுத்த இருக்கின்றனர் என்றும் மூன்றாவதாக எத்தனை பேர் ஜியோ சிம் கார்டினை துண்டிக்கின்றனர் போன்றவை டிராக் செய்யப்படும்.








