
தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா' தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு தேர்வுத் துறை அறிவிப்பு:
தொடக்கக் கல்வி ஆசிரியர், 'டிப்ளமா'
தேர்வு, ஜூன், 28ல் துவங்குகிறது. அன்றைய தினம், இரண்டாம் ஆண்டு
மாணவர்களுக்கு, இந்திய கல்வி முறை; ஜூன், 30ல், கற்றலை எளிதாக்குதலும்,
மேம்படுத்தலும் பாடத்தில் தேர்வுகள் நடக்கும்.
ஜூலை, 3ல், மொழி கற்பித்தல்; 5ல், கணிதம்; 8ல், ஆங்கிலம்; 10ல், அறிவியல்;
12ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன. முதலாம் ஆண்டுக்கு, ஜூன், 29ல்,
கற்கும் குழந்தை; ஜூலை, 1ல், ஆங்கிலம்; 4ல், கற்றலை எளிதாக்குதல்,
மேம்படுத்துதல்; 6ல், மொழி கற்பித்தல்; 11ல், கணிதம்; 13ல், அறிவியல்
மற்றும், 14ல், சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கின்றன.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.







