இந்த இரு தருணங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள், தனிப் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களால் சுயமாக மதிப்பீடு செய்யப்பட்டன. மொத்தம் 128 தந்தைகள், அவர்களது குழந்தைகளின் தகவல்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆண் அல்லது பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி, அப்பாக்கள் நெருக்கமாக இருந்த குழந்தைகள் பல்வேறு திறன் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தன. அதிகம் விலகியிருந்த அல்லது மன அழுத்தத்தை வெளிக்காட்டிய அப்பாக்களின் குழந்தைகள், குறைவான மதிப்பீட்டைப் பெற்றிருந்தன.
குழந்தை மன நல இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, ‘விலகியிருக்கும் அப்பாக்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுடன் தொடர்புகொள்ள குறைந்தளவிலான சொற்களை அல்லது சொற்களற்ற உத்திகளைப் பயன்படுத்தினார்கள். இது சமூகத்திலிருந்து குழந்தை கற்றுக்கொள்ளும் அனுபவத்தைக் குறைக்கிறது. அவர்களின் அறிவாற்றல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று கூறுகிறது.









