Flash news : சென்னை, மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்
உயர்
கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:துணைவேந்தர் நியமனத்திற்கு
காலதாமதத்திற்கு பல்வேறு காரணம் உள்ளது. துணைவேந்தர் பதவிக்கான கல்வி
தகுதி, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி காலியாகும் 6
மாதத்திற்கு முன் தேர்வு பணி துவங்கும். இந்த குழு, துணைவேந்தர்
நியமனத்திற்கான உரிய நபர்கள் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து, 4 மாதத்தில்
பரிந்துரையை வழங்கும். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும்.சென்னை
அண்ணா பல்கலை துணைவேந்தர் 3 அல்லது 4 மாதத்தில் தேர்வு செய்யப்படுவார்.
அண்ணா பல்கலைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரை கவர்னர் நிராகரித்து
விட்டார்.பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து போடவிட்டாலும் மாணவர்களுக்கு
பாதிப்பு கிடையாது.
விரைவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்







