நீட் தேர்வு வழக்கில் திருப்பம்: வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.
நீட் தேர்வு வழக்கில் திடீர் திருப்பமாக இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய
மொழி வினாத் தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, திருச்சியைச் சேர்ந்த 10 மாணவர்கள்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்காமல் இத்தேர்வு நடத்தப் பட்டது. இந்த பாரபட்ச நடவடிக் கையால் திறமையான மாணவர் கள் பலருக்கு மருத்துவம், பல் மருத்துவ இடம் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள் ளன. எனவே நீட் தேர்வை ரத்து செய்யவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனுக்கள் மே 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு முடிவை வெளியிட உயர் நீதிமன்ற கிளை இடைக் காலத் தடை விதித்தது. பின்னர் விசாரணை ஜூன் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக புதுக்கோட்டையைச்சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் என்பவர் உயர் நீதி மன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆங்கில மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியைவிட, தமிழ்மொழி வினாத்தாளில் கேள் விகள் எளிதாகவும், இந்தி, குஜ ராத்தி, மராத்தி மொழி வினாத் தாள்களில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிக எளிதாகவும் இருந் தன. வினாத்தாள்கள் ஒன்றுபோல் இல்லாதபோது தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு சரியாக இருக்காது.எனவே மே 7-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மருத்துவம், பல் மருத்துவக் கல் லூரிகளில்பிளஸ் 2 மதிப்பெண் கள் அடிப்படையிAல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தர விட வேண்டும் எனக் கூறப்பட் டுள்ளது.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந் தர் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. நீதிபதி அளித்த உத்தரவில், ‘‘மனுதாரர்கள் இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத் தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், இந்திய மருத்துவக் கழகம், சிபிஎஸ்இ ஆகியோர் பதில் அளிக்க வேண் டும். அடுத்த விசாரணை ஜூன் 12-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அன்றைய தினம் மதுரை, திருச்சி மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவும் விசார ணைக்கு வருகிறது. அந்த மனுக் களுடன் சேர்த்து இந்த மனு வும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.A