தமிழ்நாடு சட்ட பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், சீர்மிகு சட்ட
பள்ளியில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு, தமிழக அரசின் கவுன்சிலிங் மூலம்
மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இதில் சேரலாம். இந்த ஆண்டு
கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2,964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில்
தகுதியான, 2,600பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து,
தரவரிசை அடிப்படையில், இன்று கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை
துவங்குகிறது.







