இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:தொழிற்நுட்ப உதவியாளர் நேர்காணல் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, இரு வாரங்களுக்கு மேல் ஆகியும், நேர்காணலுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், தொழிற்நுட்ப உதவியாளர் பதவிக்கு, நேர்காணலை நடத்தாமல், மின் வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.
தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.








