
இன்று 04/07/2017 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா தியாகதுருகம்
ஒன்றியத்தில் பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்
சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள்
வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியமாம்பட்டு கிராம மக்கள் பள்ளிக்கு
தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர்.
ஊர்வலம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி செல்வி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து
கொண்டனர் .