கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக சொந்தப் பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறையை
உருவாக்கியிருக்கிறார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர்.
ஆனால், அதற்கேற்ற பொருளாதார உதவிகள் எதுவும் கிடைக்காததால், தனது நகைகளை அடமானம் வைத்து ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார். பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார். கணிப்பொறி உதவியோடு கற்றல் முறைகளைக் கவனிக்கும், பொது மக்கள் ஆச்சரியத்தோடு தங்கலிகுப்பம் பள்ளியைக் கடந்து செல்கின்றனர்.

பிறகு, என்னுடைய கணவரின் எல்.ஐ.சி பணத்தில் இருந்து 25 ஆயிரத்தை எடுத்து ஒரு லட்ச ரூபாயில் டிஜிட்டல் வகுப்பறையை அமைத்தேன். இப்போது கணினி இயக்குவதிலிருந்து, டிஜிட்டல் பணிகளை என்னுடைய மாணவர்களே பார்த்துக்கொள்கின்றனர்" என்றார் நெகிழ்ச்சியோடு.








