கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு
காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காமராஜரின் ஆட்சி, அவரது எளிய வாழ்க்கை, அவரது கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.அதேபோல, மாணவர்கள் மத்தியில் போட்டி நடத்தி, பரிசு வழங்கவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும், ௧௫ம் தேதி சனிக்கிழமை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.








