ஒரே 'நீட்' வினாத்தாள் தான்! : மத்திய அமைச்சர் உறுதி
இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாக புகார் எழுந்தது. வங்க மொழியில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் கடினமாக இருந்ததாக, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதுபற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
மாநில மொழிகளில் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக கூறுவது தவறு; ஒரே மாதிரியாக தான் தயாரிக்கப்பட்டது. இனிமேல், ஆங்கில வினாத்தாளின் மொழி பெயர்ப்பாகவே, மற்ற மொழி, வினா தாள் இருக்கும்; இதன் மூலம், அனைத்து வினாத்தாள்களும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.








