1,188 காலியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு: சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் - நேர்முகத் தேர்வை நீக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.
1,188 காலியிடங்கள்
எழுத்துத் தேர்வு நீங்கலாக மற்ற பிரிவுகளுக்கான 5 மதிப்பெண்களில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியிருந்தால் பல் வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகலாம். எனவே, அரை மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைப் போன்று வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு, பதிவுசெய்து காத்திருக்கும் ஆண்டுக்கு தகுந் தாற்போல் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கலாம் என்றும் அரசுக்கு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அண் மையில் வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் நியமனம் தொடர் பான அறிவிப்பும் இடம்பெற்றது. 1,188 சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய ஜூலை 3-வது வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு 19-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
நேர்முகத் தேர்வு நீக்கம்
இந்த நிலையில், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிட்டது. ஏற்கெனவே வெளி யிடப்பட்ட அரசாணையில் குறிப் பிடப்பட்டுள்ளவாறு, சிறப்பாசிரியர் நியமன முறை அமைந்திருக்குமா அல்லது புதிய முறை கொண்டு வரப்படுமா என்று தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சியை முடித்த சுமார் 2 லட்சம் பேர் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.
உயர் அதிகாரி விளக்கம்
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “எழுத்துத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட அரை மதிப் பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றவும், ஓவியம், இசை, உடற்கல்வி, தையல் பாட ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அவசியமில்லை என்பதால்நேர்முகத் தேர்வை நீக்கிவிடவும் முடிவுசெய்துள்ளோம். சிறப்பாசி ரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.








