TNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.ஏப்ரல் 29- ஆம் தேதி நடந்த முதல் தாள் தேர்வில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 55 5 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த இரண்டாம் தாள் தேர்வில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.








