இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரத்யேக படிவம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைநிரப்பி பள்ளிகளில் வழங்க மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தில் ஆதார் எண், தந்தையின் செல்போன் நம்பர், மாற்றுத் திறனாளிகள் மாணவர் பற்றிய கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அவை கம்யூட்டரில் ஏற்றப்பட உள்ளன. இதனால் நடைமுறை சிக்கல் வெகுமாக குறைவதாகத் தேர்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.








