கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல்
கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர்
பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர்,
நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து
ஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார்,
'டிவி'க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.
இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர்
அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை
நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...