அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியத் தடை..என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?
முசிறியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அரசுப் பள்ளிகளில்
ஆசிரியைகள் சுடிதார் அணிவதற்கு அனுமதி கேட்டு முதலமைச்சரின் சிறப்புப்
பிரிவுக்கு பெட்டிஷன் போட்டுள்ளார். அதற்கு, பதில் அளித்துள்ள கல்வி
இயக்குனரகம் 'அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சுடிதார் அணிவதற்கு அனுமதி தர
முடியாது. ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்
சுடிதார் அணியலாம்' என பதில் வந்திருக்கிறது. இந்த உத்தரவு பற்றி அரசுப்
பள்ளி ஆசிரியர்கள் கருத்து என்ன? வரவேற்கிறார்களா... எதிர்க்கிறார்களா?








