இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, போபாலில் உள்ள மௌலானா ஆஸாத் தேசிய தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை சென்றார்.
அப்போது அவர் கூறுகையில், "புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்; மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தாலும், ஆறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் அசுத்தமான நீர் கலப்பது நிறுத்தப்படாமல் போனாலும், மனித இனத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும்' என்றார்.
இதேபோல், மத்தியப் பிரதேசம் முழுவதும் 2.15 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 96 லட்சம் மாணவர்களுக்கு சனிக்கிழமை பாடம் நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








