விழாவில், முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, விழாவில் பங்கேற்றிருந்த கிராம உதவியாளர்கள், திடீரென ஊதிய உயர்வு வழங்கக்கோரி முழக்கம் எழுப்பினர். அதைப் பார்த்து முதல்வர் பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அமைச்சர் உதயகுமார் எழுந்து, அமைதி காக்குமாறு கிராம உதவியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து கிராம உதவியாளர்கள் முழக்கமிட்டதால், முதல்வர் பழனிசாமி விழா மேடையிலிருந்து புறப்பட்டுச்சென்றார். மேலும், விழா நிறைவடைவதற்கு முன்னதாகவே கிராம உதவியாளர்கள் சிலர் பாதியில் வெளியேறினர்.முதல்வர் பழனிசாமி விழாவில் கிராம உதவியாளர்கள் முழக்கமிட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.