நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது. ஒராண்டுக்கு மட்டும்
விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு
ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை,
தாம்பரத்தில் அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்தை
புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதல்வர்,
அமைச்சர்கள், அதிகாரிகள் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினர். நீட் தேர்வில்
தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. நீட்
தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்க தயார். அரசு மருத்துவ
கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தயார். கிராமப்புற
மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டு வர
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.