போராட்டம் நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு உங்கள் பார்வைக்கு
சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
போராட்டம் வெற்றி பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது .
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர். இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன. பேரணிக்கான அனுமதி கோரி சென்னை மாநகரக் காவல் துறையினர் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச்செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில் காவல் துறை இந்தப் பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு எழுதியமைக்கு விண்ணப்பித்தவர்கள் பதில் அளிக்காததால் ஆர்ப்பாட்டமாய் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளனர். இதையெடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்







