புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான
பொதுத்தேர்வுக்கான மையங்கள் அமைப்பதற்காக, அதுகுறித்த விபரங்களை அனுப்பி
வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும்பொதுத்தேர்வாக
மாற்றப்பட்டுஉள்ளது. கடந்த ஆண்டு வரை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை உள்ள
பள்ளிகள் மட்டுமே தேர்வு மையங்களாக இருந்தன. குறைவான எண்ணிக்கை உள்ள
மாணவர்கள், அருகில் உள்ள வேறு பள்ளி தேர்வு மையத்துடன் இணைக்கப்படுவது
வழக்கம்.'நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு
நடத்தப்படுவதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என,
கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துஇருந்தார். தற்போது ஒவ்வொரு
பள்ளியிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும்
மாணவர்கள் எண்ணிக்கை, தேர்வுமையம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பி
வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு மையங்களின்
எண்ணிக்கை அதிகரிப்பதால், மாணவர்களின் தேர்வு நேர அலைக்கழிப்பை குறைக்கும்
வாய்ப்பு உருவாகிஉள்ளது.







