உயர்நீதிமன்றம் ஆசிரியர்கள் சம்பளத்தை, அன்றாடக் கூலியாட்கள் சம்பளத்தோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல், அரசு ஊழியர், எம்.எல்.ஏ., நீதிபதிகள் எல்லோர்
சம்பளத்தையும் கூலியாட்கள் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதால் என்ன பயன்?
அப்படியிருக்க, இதில் ஆசிரியர்கள் சம்பளத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது எவ்வகையில் நீதி?
கூலிக்காரன் உழைக்கும் நேரத்தை நீதிபதி உழைக்கும் நேரத்தோடும், கூலிக்காரன்
சம்பளத்தை நீதிபதி சம்பளத்தோடும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
*ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
அதற்கு இழப்பீடு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து எப்படிக் கொடுக்க
முடியும்?







