தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் உயருமா?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக
விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி
தலைமையில் தொடங்கியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு
பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து
விவாதிக்கப்படுகிறது.







