''கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என,
கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். மாநில அளவிலான குழு
விளையாட்டு போட்டி துவக்க விழா, ஈரோடு மாவட்டம், கோபி அருகே, தனியார்
கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: கல்வி ஒன்றால் மட்டுமே தமிழகம்
முன்னோடி மாநிலமாக திகழும். 'நீட்' தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு
வேண்டும் என்பது தான், எங்கள் கொள்கை. அதேபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு,
என்ன வரப்போகிறது என, எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனாலும்,
மாணாக்கர்களை தயார்படுத்த, இந்த அரசு தயாராகி கொண்டிருக்கிறது. இவ்வாறு
அவர் பேசினார்.







