வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில்
அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ
அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப்
அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக்
குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக்
கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகர்களின் கருத்துகளைக்
கேட்டு தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம்
செயல்படுத்தப் போகிறது.வாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட
அட்மின்கள் இருக்கும்போது, ஒரு அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய
முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம் செய்ய முற்படும்போது அதனைத் தடுக்கும்
புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
Read More Click Here
Read More Click Here








