Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
எழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்
எழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்
*எழு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்
மடிக்கணினி எல்லாம் கொடுத்துஅரசுப்பள்ளி மாணவர்களைஹைடெக்காகமாற்ற நினைக்கும்அரசு பாராட்டுக்குரியதுதான்.ஆனால்,மா ணவர்களுக்குக் கணினிகொடுத்த அரசு கணினி வழிக்கல்வியைக் கற்றுக் கொடுக்கஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன்?
இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக் கல்வி பயின்ற பி.எட் ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்தியது அரசு.அதில்,ஒன்றாம் வகுப்பு முதல்பத்தாம் வகுப்பு வரை கணினிஅறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக் கிறது.
முதல் இரண்டு வருடம் மட்டும்புத்தகங்கள் கொடுக்கப்பட்டு,அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.ஆனால், கடந்த ஆறுவருடங்களாக கணினி அறிவியலில்பி.எட். படித்தஆசிரியர்களைபணிநியமனம்செ ய்யவில்லை.கடந்த 15ஆண்டுகளாக கணினி அறிவியல்பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல்தவிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டுகணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.இச்சங் கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு.நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன்.
இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள்வேலை இல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனு இருந்தா அதுக்கானவேலை வாய்ப்பு இருக்கணும்.வருஷாவருஷம் ஆயிரக்கணக்கானபேர் படிச்சுட்டு வெளியே வராங்க.ஆனா,ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்திலபதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை.
பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும் வச்சிருக்காங்கன்னு புரியல" என்றுகுமுறுகிறார்.கம்ப்யூட்டர் சயின்ஸ்லபி.எட். படிச்ச நாங்க பலவகையில் நசுக்கப்பட்டவங்க. மற்றஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள் கலந்துகொள்ளும் டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூட கலந்துகொள்ள எங்களுக்குஅனுமதி கிடையாது" என்று விரக்தியுடன் பேசுகிறார்கள்கணிப்பொறி ஆசிரியர்கள்.2006-ஆம்ஆண்டுக்கு ப் பிறகுதரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி ஆசிரியர்கள்நியமிக்கப்படவில்லை. கடந்தவருடத்தில் கூட 407 பள்ளிகள்தரம்உயர்த்தப்பட்டதாக கூறியிருக்கிறார்.ஆனால் அந்தப்பள்ளிகள் எதிலும் கணிப்பொறிவழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர்சயின்ஸ் டீச்சர் இல்லாமல்தான் பலபள்ளி மாணவர்கள் தானாவே கற்றுக்கொள்கிறார்கள்.
2011 இல் சமச்சீர் கல்வி கொண்டுவந்தார்கள் அதில் கணினிஅறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந் த புத்தகங்களும் அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.மாணவர்களு க்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரிஆசி ரியர்களுக்கும் வேலைவழங்கவில்லை.வருடந்தோறும் மத்திய அரசு கோடி கணக்கில் நிதிஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு 250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய்கொடுத்தார்கள்.ஆனால் எதையும்செயல்படுத்தாமல்வீணாக்கு கிறார்கள்"என்று மாநிலசெயலாளர் குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில்ஆர்ப்பாட்டமும் போராட்டமும்நடத்தியிருக்கிறோம். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்திலும் கருணை மனுகொடுத்திருக்கிறோம்.
67முறை சென்னைக்கு வந்து மனுசெய்திருக்கிறோம்.36முறை கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
அரசு அதிகாரிகள் அரசியல்தலைவர்கள் பலரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையைமுன் வைத்திருக்கிறோம்.
எல்லா இடங்களிலும் சொல்லிவைத்தது போல் அரசின் கொள்கைமுடிவுக்கு உட்பட்டது என்ற பதில்தான் வருகின்றது.
தனியார் பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது.அதை இன்னும்மேம்படுத்த அரசும்ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப்பள்ளிகளில் ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூக்குமட்டுமே அதுவும் பாதி பள்ளியில்ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கிறார்கள்" ...
*படித்தது கணினி அறிவியல்பிடிப்பது கசாப்புக் கத்தி!*
"2010இல் பி.எட் முடிச்சேன். அப்பா கூடவாரத்துல ஒருநாள் மட்டன் கடையில்வேலை பாக்குறேன்.எனக்குகல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கு.இப்ப வரைக்கும்எவ்வளவோ போராட்டம்பண்ணிருக்கோம்.எத்தனை யேஇடத்துல மனு கொடுத்தும்ஒண்ணும் நட்க்கல.நாங்கநாற்தாயிரம் ஆசிரியர்கள்வேலையில்லாமல் இருக்கிறோம்.அங்கு பள்ளிகளில் பிள்ளைகளுக்குஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்குஒரு டீச்சருக்கு வேலைகிடைச்சிருந்தாலும் படிச்சவங்கபாதிபேரு வேலைக்குப்போயிருக்கலாம் என்றுஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு பி.எட்கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரிகள் ஆசிரியர்கள்சங்கத்தின்மாநில பொருளாளர்
கார்த்திக்.
*ரங்கநாயகி, அந்தியூர்*
பி.எட் முடிச்சிட்டு ஒரு பனியன்கம்பெனிக்கு வேலைக்குப்போய்ட்டிருக்கேன் சூப்பர்வைசராஇருந்தாலும் எல்லா வேலையும்பாக்காணும்.படிச்ச படிப்புக்கேத்தவேலையில்லாம,குறை ஞ்ச கூலிக்குகிடைத்த வேலையைச்செஞ்சிட்டிருக்கேன்.பொ ண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட்கம்ப்யூட்டர் சயின்ஸ்னா வேலைகிடைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டுபோய்டுறாங்க.
*ஆரிஃபா, ஈரோடு*
எங்க வீட்ல அஞ்சுபொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டு ஒருகம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டுஇருக்கேன்.எங்கப்பாவால வேலைசெய்யமுடியாது.நாங்க வேலைசெஞ்சுதான் குடும்பத்தக்காப்பாத்தானும்.வே லைகிடைக்காததால கல்யாணம்தள்ளிப்போய்ட்டு இருக்கு.
*லலிதா, கொள்ளிமலை*
அம்மாவோட கூலி வேலைக்குப்போய்டுருக்கேன்.வீட் டில இருக்கிறஆடு மாடு அப்பாபாத்துக்கிறாங்க.இவ்ளோ தூரம்படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறதுரொம்ப கஷ்டம இருக்கு.பி.எட்படிச்சிருந்த வேலை வாங்கித்தந்துடுவோம்னு சொல்லிபொண்ணு பாக்க வந்தாங்க.கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும்அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....
*கிருத்திகா, கோவை*
எனக்கு குடும்பத்தில பலசிக்கல்.அரசு வேலைதான் என்னைமீட்டெடுக்காணும் என்னுடையரெண்டு பெண் குழந்தைகளோட எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கையநகர்த் துறதுறதே பெரிய போராட்டமஇருக்கு...
****
சாய் ஜானு , கரூர்
நான் ஒரு கல்லூரியில்விரிவுரையாளராக வேலைசெய்கிறேன்.
எனக்கு சில கேள்விகள் இருக்கு.
--->
வேலைகேட்டு போராடும்போதுஅரசுக் கொள்கை முடிவுக்குஉட்பட்டதுன்னுசொல்றா ங்க.அப்படினா அரசுகொள்கை பி.எட் முடிச்சவங்களுக்குவேலை தரக்கூடாது என்பதா?
--->
அரசு வேலைக்கு எடுக்க முடியாதநிலையில் ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?
--->
மத்திய அரசு கம்ப்யூட்டர்சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காககொடுத்த பணத்தை ஏன் திருப்பிக்கொடுத்தார்கள்?
இதுக்கெல்லாம் என்ன பதில்வைத்திருக்கிறது அரசு ?
என கேள்விகளை அடுக்குகிறார்கள்
சுமார் 40,000 வேலையில்லாபட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள்.இவர்களின் வாழ்க்கைக்கேள்விக்குறியாகமாறி யிருக்கிறது.தாயுள்ளம்கொண்ட தமிழக அரசு எங்களின் மீது கருணை கண் காட்டுமா இனியாவது??
திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் 655/2014.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








