50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை.
நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில் வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.








