அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2017-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர் களில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட
தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய
தனித்தேர்வர்கள் வரும் டிசம்பர் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர்
29-ம் தேதிவரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழு விவரங்களை
அறிய அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை அணுகலாம். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.