சென்னை: குரூப் - 4 தேர்வுக்கு, தேர்வு கட்டணம் செலுத்த, இன்று கடைசி நாள்
என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., என்ற,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இணையதள வங்கியில் பணம் செலுத்தியவர்களின், விண்ணப்பம்
ஏற்கப்படாவிட்டால், 'Online Payment Verification' என்ற இணைப்பில்,
விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம். அனைத்து பணப்பரிமாற்ற முயற்சிகளும்
தோல்வியடைந்தால், அவர்கள் இன்றைக்குள், மீண்டும் தேர்வுக் கட்டணம் செலுத்த
வேண்டும்.தோல்வியடைந்த
பரிமாற்ற தொகை, விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தபால் நிலையம், இந்தியன் வங்கி செலுத்து சீட்டில், கட்டணம்
செலுத்தியவர்கள், வரும், 20ம் தேதி வரை காத்திருந்து, இணையதளத்தில்
விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகும், தேர்வு கட்டணம்
ஏற்கப்படாவிட்டால், பணம் செலுத்திய ரசீதின் நகலை, apdtech2014@gmail.com
என்ற, இ - மெயில் முகவரிக்கு, வரும், 26க்குள் அனுப்ப வேண்டும்.
தொழில்நுட்ப காரணத்தால், கட்டணம் செலுத்தாவிட்டால், அதற்கு தேர்வாணையம்
பொறுப்பல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.