சென்னை: வணிக உதவி இயக்குனர் பதவிக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு தொழில் மற்றும் வணிக உதவி இயக்குனர் பதவிக்கான எழுத்துத் தேர்வு,
ஜூலை, 16ல் நடந்தது. இதில், 1,035 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை
நேற்று, டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டது. விபரங்களை, www.tnpsc.gov.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வானவர்களுக்கு, ஜன., 4ல் நேர்காணல்
நடைபெற உள்ளது.