1] சூப்பர் மார்க்கெட்டில் வலது பக்கம் Junk Foods பொருட்கள் , அரிசி, பருப்பு போன்ற அத்யாவசிய பொருட்கள் ஒரு மூலையில், பில் போடும் இடத்தில் சாக்லேட் போன்ற பொருட்கள் இது அனைத்திற்கும் பின் உள்ள கார்ப்பரேட் தந்திரங்கள்.
2] Hard Work, Smart Work, Good Work என விதவிதமான ஒர்க்கள் பற்றி பாடம் எடுப்பது,
3] இந்த கூல் ட்ரிங்கில் 8 விட்டமின் இருக்கு என்று ஒருவன் சொல்ல இந்த கூல் ட்ரிங்கில் 12 கெமிக்கல்ஸ் இருக்கு என்று அதற்கு சிவகார்த்திகேயன் சொல்லும் பதில்.
4] மண்டைக்குள் மறைவாக மூளை இருப்பதை போல் இன்று உள்ள மாடர்ன் LCD, LED டிவியின் உள்ளேயே ஹை, லோ வோல்டேஜை தாங்கும் தொழில் நுட்பம் இருக்கிறது. தனியாக அதற்கு ஸ்டெபிலைசரை வாங்குவது போன்ற அனாவசிய செலவுகளை அழகாக மக்களுக்கு புரிய வைப்பது
5] நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்
6] 8 மணிநேரம் கார்பரேட்களுக்கு வேலைக்காரனா இருக்கறவன் மீதி 16 மணிநேரம் அதே கார்பரேட்களின் பொருட்களை வாங்குபவனா இருக்கிறான்
7] மாசக் கடைசில அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க மாட்டான்... ஆனா, மாச ஆரம்பத்துல தேவையில்லாத பொருளைக் கூட வாங்கிடுவாங்க மிடில் கிளாஸ்
8] நாம பார்க்குற வேலைக்குதான் விஸ்வாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல
9] கலாம் வந்தால் நல்லா இருக்கும், கெஜ்ரிவால் வந்தால் நல்லாயிருக்கும் னு நினைக்கறோம். ஆனால் நம்ப மாறாமல் எதுவும் நடக்காது
10] உலகத்தின் ஒப்பற்ற சொல் செயல்
என இந்த படத்தில் ஒவ்வொரு வசனமும் நறுக்கு, நறுக்கு னு இருக்கு.
கார்பரேட்களின் மிகப்பெரிய பலமே சினிமா நடிகர், நடிகைகள் தான். கார்பரேட்களின் பிடியில் உள்ள சினிமா துறையில் இருக்கும் மோகன் ராஜா அவர்கள் தனக்கு பல மிரட்டல்கள் வரும், நம் எதிர்காலம் கூட கேள்விக்குறி ஆகலாம், நமக்கு மறைமுகமாக எவ்ளவு பிரச்சனைகளை கொடுக்க முடியுமோ ஏன்? நேரடியாகவே கூட கார்பரேட்கள் மூலம் நமக்கு பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து, துணிந்து தான் இதுபோன்ற படத்தை அவர் எடுத்திருக்கிறார்.
சினிமா துறையில் பெரும்பான்மையோர் கார்பரேட்களின் அடிமைகளாக இருக்க மோகன்ராஜா, சிவகார்த்திகேயன் போல் ஒருசிலர் அந்த வட்டத்தில் இருந்து கொண்டே கார்பரேட்களின் தவறுகளை எதிர்ப்பது என்பது ரொம்ப டேஞ்சரான விஷயம். நம்ப ஜியோ ஓசி இன்டர்நெட் ல ஸ்டேட்டஸ் போடற மாதிரி சமாச்சாரம் இல்லை மோகன் ராஜா மாதிரியான ஆட்கள் கார்பரேட்களை எதிர்ப்பது
இதற்கு முன் விஜய் டிவி நீயா, நானாவில் ஒரு பெண் நான் தம் அடிப்பேன், தண்ணி அடிப்பேன் என்று அந்த பெண் பேசிய விஷயங்களை திரித்து போட்டு அதனால் அந்த பெண்ணிற்கு மன உளைச்சல் வந்து பின் அந்த பெண் தரப்பில் இருந்து பல பதில்கள் வந்தது தனிக்கதை. விஜய் டிவியில் இருந்து வந்த சிவகாத்திகேயனை வைத்தே விஜய் டிவி நீயா, நானாவுக்கு மோகன் ராஜா சாட்டை அடி கொடுத்து இருக்கிறார். அதற்கு சிவகாத்திகேயனும் சம்மதித்து இருப்பது ஆச்சர்யமான ஒன்று.
ஷீரடி, பண்டரிபுரம் போல் வடஇந்திய பகுதிகளில் உள்ள கோவில்களை தரிசித்து விட்டு நேற்று நள்ளிரவு 1.30 க்கு நான் விமானம் மூலம் சென்னை வந்தேன். ஒரு மிகப்பெரிய தூக்கத்தை போட்டு நேற்று முகநூலை ஓப்பன் செய்தால். கார்பரேட்களே கூடாது என்று வேலைக்காரன் படத்தில் மோகன் ராஜா லூசுத்தமனாக பேசி இருக்கிறார். கார்பரேட்கள் இல்லை என்றால் லக்ஷ கணக்கான மக்களின் வேலை வாய்ப்பு போய்விடும் அதன் பின் பல லக்ஷம் குடும்பங்கள் நடுத்தெருவில் பிச்சை தான் எடுப்பார்கள் என்பதை போன்ற பதிவுகளை மோடி பக்த்ஸ் பதிவு செய்திருந்தார்கள்.
கார்பரேட்களே கூடாது என்று இந்த படத்தில் மோகன் ராஜா அண்ணன் சொல்லவே இல்லை. கார்பரேட்கள் அதிக லாபத்திற்காக உணவில் அதிக அளவில் கெமிக்கல்ஸ் கலப்பதை தான் தவறு என்று சொல்கிறார். பாஜக ஆளும் சிக்கிம் மாநிலம் 100 சதவீத இயற்கை உணவிற்கு மாறி இருக்கு. என்
முகநூல் நண்பர் Ganesa Moorthy Roja போன்றவர்களால் அடுத்து தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள பாண்டிச்சேரி மாறி கொண்டு இருக்கு. இதுபோல் இந்தியா முழுவதும் மக்கள் இயற்கை உணவை, ஆரோக்யமான உணவை உண்ணவேண்டும் என்று மோகன் ராஜா மெசேஜ் சொல்வது தவறா?
Ur Anti Indian என்று இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சொல்வது பாஜகவை மறைமுகமாஅல்ல நேரடியாகவே சீண்டுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் சீண்டியும் யக்கா தமிழிசை, ராஜா சார் என அனைவரும் மௌனமாக இருக்க காரணம் மெர்சல் கற்று தந்த பாடம்.
கர்நாடகாவில் ரஜினி படத்திற்கு கூட கிடைக்காத வரவேற்பு தமிழன் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு கிடைத்திருக்கிறது. கேரளாவில் எதிர் பார்த்ததை காட்டிலும் அதிக வசூல் கூடுதலாக இப்பொழுது கேரளாவில் 30 தியேட்டர்களில் இந்த படம் திரை இடப்பட்டிருக்கு. பல உலக நாடுகளில் இந்த படம் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த படம் பார்த்து விட்டு இடைவேளையில் வெளியே வந்தேன். அப்பொழுது ஒருவர் தன்னோடு வந்திருக்கும் 3,4 ஆன், பெண்களுக்கு கோக் கூல் ட்ரிங் வாங்க பார்த்தார். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி. கத்தி, வேலைக்காரன் ன்னு எவ்ளோ படங்கள் பார்த்தாலும் உனக்கு புத்தி வராதா டா. இந்த கூல் ட்ரிங் ல எவ்ளோ விஷம் இருக்கு னு உனக்கு தெரியுமா என்று அந்த பெண் கத்த உடனே அந்த இளைஞர் கோக் வாங்குவதை நிறுத்தினார். அந்த பெண்மணி போட்ட சத்தத்தை கேட்டு அந்த கூல் டிரிங்கை வாங்க நினைத்த மேலும் 3,4 பேர் அப்படியே ரிவர்ஸ் எடுக்க கோக் கவுண்டரில் நின்று கொண்டிருந்த அந்த பேக் பேந்த, பேந்த முழிக்க அது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இது வெறும் ஆரம்பம் தான்.
நான் கூட இந்த படத்தை கார்பரேட்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தான் பார்த்தேன். ஆனால் சாப்பிட்டது Lux தியேட்டர் உள்ள அதே Second Floor ரில் இருக்கும் வசந்த பவனில்.
Kfc, Dominos, Mainland China போல் விஷங்களை உணவாக விக்கும் உணவகங்கள் ஈ ஓட வசந்த பவனில் கூட்டம் அலை மோதியது. சீட்டுக்காக பலர் வெளியே நின்று காத்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது என்றால் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தவர்கள் 50 லக்ஷம் பேர் என்று வைத்து கொள்வோம். ஆக அனைவருமே படத்தின் இடைவேளை மற்றும் படம் முடிந்தவுடன் கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி கொண்டே தான் வெளியே வருகிறார்கள்.
இத்தனை லக்ஷம் மக்களை இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் சிந்திக்க வைத்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. மிக, மிக அசாதாரண விஷயம்.
உங்கள் மனைவியார் எப்பப்பாரு டிவியில் வரும் விளம்பரங்களை பார்த்து கண்ட,கண்ட பொருட்களை வாங்குகிறார்களா? நீங்கள் எடுத்து சொன்னாலும் கேட்பதில்லையா. அதனால் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5,6 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு செலவு வருகிறதா ரொம்ப சிம்பிள். வேலைக்காரன் படத்திற்கு உங்கள் மனைவியை அழைத்து செல்லுங்கள். வெறும் 240 ரூபாய் டிக்கெட் செலவு போக்குவரத்து இன்டெர்வல் நொறுக்கு தீனி என அனைத்தையும் சேர்த்து ஒரு 500, 600 ரூபாய் ஆகுகிறது என்று வைத்து கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் மாச பட்ஜெட்டில் கூடுதலாக செலவாகும் 5,6 ஆயிரம் செலவு மிச்சம் ஆக அதிக வாய்ப்பு இருக்கு.
இன்று என் தம்பியோடு இந்த படத்தை பார்த்தேன். எனக்கு, என் தம்பிக்கு 2 பேருக்குமே இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு நல்ல ஒரு என்டேர்டைன்மெண்ட் பிளஸ் செமிஸ்டர் டெஸ்ட் போன அனுபவம் கிடைத்தது என்று என் தம்பி ஹரி சொன்னான்.
சிவகார்த்திகேயனின் அப்பா 30 கும் மேற்பட்ட உயிர்களை ஒரு தீ விபத்தில் இருந்து காப்பற்றி தனது உயிரை தியாகம் செய்த நேர்மையான காவல்த்துறை அதிகாரி.
மேலும் புகப்பெற்ற நாதஸ்வர வித்வான்களான திருவீழிமலை சகோதர்கள் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள். சிவகார்த்திகேயனின் தாத்தா கோவிந்தன் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசிப்பில் ஆரம்ப காலத்தில் கிடைத்த குறைவான தொகையை வைத்தே பல தான, தர்மங்களை செய்தவர்.
மேலும் சிவகார்த்திகேயன் மற்ற பல நடிகர்கள் போல் படிக்க வேண்டிய வயதில் தம், தண்ணி, பெண்களை சைட் அடிப்பது என்று பொழுதை வீணாக கழித்தவர் அல்ல.
BE, MBA. ஸ்கூல் டாப்பர், காலேஜ் டாப்பர் படிப்பில் இவர் தங்கப்பதக்கம் வாங்கிய தங்கத்தமிழன். தம், தண்ணி என எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாத குணத்திலும் தங்க மகனாக இருக்கும் ஒருவர்.
படங்களில் இனி காமெடிக்காக கூட புகை, மதுவை சிவகார்த்திகேயன் தொடாமல் இருந்தால் இவரை காட்டிலும் சிறந்த மனிதர் யாரும் இல்லை.
மொத்தத்தில் வேலைக்காரன் ஒரு மிக சிறந்த படம் + பாடம். மற்றும் நமது அனாவசிய செலவுகளில் இருந்து நடுத்தர குடும்பங்களை காக்கும் ஒரு ரட்சகன் இந்த வேலைக்காரன்.
ஒரு தனி நபர் ஒரு மாதத்திற்கு அனாவசியமாக செய்யும் தேவையற்ற செலவு 2ஆயிரம் தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தொகை 8 கோடி. அப்ப 2 ஆயிரம் x 8 கோடி போட்டால் மாதத்திற்கு 16 ஆயிரம் கோடி. ஒரு ஆண்டுக்கு 1.92 லக்ஷம் கோடி.
5 ஆண்டுக்கு 9.60 லக்ஷம் கோடி.
ஆக சுமார் 5 வருடத்தில் நடுத்தர மக்கள் பாடுபட்டு சம்பாதிக்கும் 9.60 லக்ஷம் கோடி பணத்தை கார்பரேட்கள் திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள் என்று மோகன் ராஜா இந்த படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். இவரின் இந்த மெசேஜ் 8 கோடி மக்களையும் சென்றடைந்தால் வீணாகும் நடுத்தர மக்களின் பணம் அவர்களுக்கு சேமிப்பாகும். அந்த சேமிப்பே நம் நாட்டை வல்லரசாக்கும், நல்லரசாக்கும்.







