Horlicks நிறுவனமும், BBC தொலைக்காட்சியும் இணைந்து மூன்று பிரிவுகளில்
நான்கு சிறார் வீதம் தமிழக அளவில் பன்னிரு சாதனையாளர்களை SUPER KIDS-2017
விருதிற்குத் தேர்வுசெய்தன.Acadamies & Innovation பிரிவில் தமிழக
அளவில் பலகலைகளில் சிறந்த நால்வருள் இருவராக தேவகோட்டை, தே பிரித்தோ
மேல்நிலைப்பள்ளி வீரமாமுனிவர் கலை இலக்கியமன்ற மாணவர் ஜ.பெர்னால்டு ஜார்ஜ்
ராஜ் மற்றும் விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்
கூடலிங்கம் ( ICT தேசிய விருதாளர் திரு.கருணைதாஸ் அவர்களின் மாணவர்)
தேர்வு செய்யப்பெற்று மதுரையிலிருந்து சென்னைக்கு வழிகாட்டி ஆசிரியருடன்
சென்றுவர விமானபயணச் செலவு, அழைத்துச்சென்றுவர மகிழுந்து, இரு நாட்கள்
FEATHERS நட்சத்திர விடுதியில் தங்குமிடம், உணவு, விழா படப்பிடிப்பில்
வி.ஐ.பி களுடன் முன்வரிசை இருக்கை, SUPER KIDS-2017 சான்றிதழ் ஆகியனவற்றை
வழங்கி கௌரவித்தது. சென்னை மணப்பாக்கம் FEATHERS - A RATHA HOTEL
-இல்(மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இல்லம் எதிரில்) நடைபெற்ற பிரம்மாண்ட
விழாவில் நடுவர்களாக பத்மஸ்றீ அருணாசலம் முருகானந்தம், பாடகர் சித்ரா,
கிரிக்கெட் வீரர் ஜவஹல் ஸ்றீநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
திரைத்துறை நடிகையர்
பிரியாமணி, ரித்திகாசிங், அனுஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விஜய்
தொலைக்காட்சி மாகாபா ஆனந்த் மற்றும் மலையாள நடிகர் ஆஷல் நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி தமிழ், ஆங்கிலம், மலையாளம்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. விழா முடிந்து வருகையில் அழகப்பா
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்களிடம் மதுரை விமான
நிலையத்தில் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.
நன்றி:
* BBC & HORLICKS.
* தே பிரித்தோ பள்ளி நிர்வாகத்தினர் & ஆசிரியர்கள்.
* திரு.சி.சதீஷ்குமார் (கல்வியாளர்கள் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர்) & திரு.கருணைதாஸ் ( ICT hatric தேசிய விருதாளர்).
* BBC & HORLICKS.
* தே பிரித்தோ பள்ளி நிர்வாகத்தினர் & ஆசிரியர்கள்.
* திரு.சி.சதீஷ்குமார் (கல்வியாளர்கள் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர்) & திரு.கருணைதாஸ் ( ICT hatric தேசிய விருதாளர்).










