அறநிலையத் துறை செயல் அதிகாரி பணியில், நேர்முக தேர்வுக்கு தகுதி
பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழக இந்து சமய
அறநிலையத்துறையில்,
'குரூப் - 7'ல் அடங்கிய, செயல் அதிகாரி பதவிக்கு, இந்த ஆண்டு, ஜூனில்
போட்டி தேர்வு நடத்தப்பட்டது. அதில், 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.தேர்வில்,
தேர்வர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் படி,
தகுதியானவர்களுக்கு, நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற,
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஜன., 3ல், நேர்முக தேர்வு
நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவித்துள்ளார்.