Today Rasipalan 25.12.2017 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Today Rasipalan 25.12.2017 :

மேஷம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.
எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ரிஷபம் செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் 
மிதுனம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
கடகம் மதியம் 2.35 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
சிம்மம் மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மதியம் 2.35 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்  
கன்னி வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே 
துலாம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு  
விருச்சிகம் அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம் 
தனுசு குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
மகரம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்  
கும்பம் மதியம் 2.35 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன் 
மீனம் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். மதியம் மணி 2.35 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H