▫பீஜிங் : சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்கவும், சீனா, அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
▫இதுகுறித்து, சீன அரசு அதிகாரிகள் நேற்று கூறியதாவது:வெளிநாடுகளில், சீனர்கள், ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், எத்தனை கார்டு வைத்திருந்தாலும், ஒவ்வொரு கார்டிலும், ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
▫இனி, ஏ.டி.எம்., கார்டுகள் எத்தனை இருந்தாலும், ஒட்டு மொத்தமாக, அதிகபட்சம், ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இதன் மூலம், பெரியளவில் பணம் எடுப்பது தடுக்கப்படும். சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்







