வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களே எண்ணங்களே ஏணிப்படிகள்🌻 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களே எண்ணங்களே ஏணிப்படிகள்🌻

நமது வாழ்க்கையானது நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும். அதாவது நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையானது, இதுவரை நமது நெஞ்சில் தோன்றிய எண்ணங்களின் செயல் வடிவமாகும்.

ஏனென்றால் எண்ணங்களே செயல்களாக மலர்கின்றன. செயல்களே வெற்றியைத் தருகின்றன. ஆகவே சிந்தனையே நமது செல்வம். நற்சிந்தனை நமது வாழ்வின் வரங்களை அள்ளி அள்ளித் தருகின்ற தவம். ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற மனநிலையோடு சிந்தித்து புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எதுவும் சாத்தியமே என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பிறகு வெற்றி நம்மிடம் கூட்டணி அமைத்துக்கொள்ள முயலும்.

மனிதர்கள் நாம்!
எது வந்தாலும் எதிர்த்துப்
போராட வேண்டும்

துன்பத்தை கண்டதும்
மண்ணில் தலை புதைக்க
நாம் நெருப்பு கோழிகள் அல்ல

நம்மால் முடியும் என்று!…..
வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பு.

 இந்த வாய்ப்பை  சரியாகப் பயன்படுத்தினால் நாமும் வெற்றியடைந்து சமுதாயத்தையும் வெற்றியடையச் செய்யலாம்.

உலக வரலாறு என்பது சாதித்த சில மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். நாமும் நினைத்தால் வரலாறு படைக்கலாம். அதற்குத் தன்னம்பிக்கையும், திட்டமிட்ட உழைப்பும் தேவை.

நமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கையாகிய ‘தன்னம்பிக்கை’ நமக்கு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எதையும் ‘முடியும்’ என்று நினைப்பதே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி. ஆகவே எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தோடு தொடங்க வேண்டும்.

‘முடியும்’ என்ற எண்ணமே, ஒரு காரியத்தை முடிப்பதற்கான வழிகளைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தது.

ஆம்! முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும். எல்லாம் நம் கையில் தான் இருக்கின்றது. முதலில் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்.

பிறக்கும்போதே யாரும் சாதனையாள ராகப் பிறப்பதில்லை. இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் தான் ஒருவரைச் சாதனையாளராக மாற்றுகின்றது. முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம்

எதையும் பன்முகமாகவும், நேர்முகமாகவும் சிந்தித்தால் தொடர்ந்து வெற்றியடைய முடியும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். எதைச் சிந்திக்கும் போதும், அந்தச் சிந்தனையை செயலாக்கும் போதும் ஏற்படும் விளைவுகளையும் சேர்த்தே சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் வளர்ந்து வளர்ந்து செடி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது. நதி நகர்ந்து நகர்ந்து தன்னை உயிரோட்டமாக வைத்துக் கொள்கின்றது. அது போல முயன்று முயன்று முன்னேற்றப் பாதையில் விரைந்திட வேண்டும்.

எதையும் குறைந்தது இருமுறையேனும் சிந்தித்து விட்டு முடிவெடுக்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் மனம் விரியத் தொடங்கு கின்றது. விரிந்த மனமே வெற்றியின் விளைநிலம்.

எதிலும் தவறு ஏற்படுவது இயற்கையே என்றாலும் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, ஒருமுறை நேர்ந்த தவறுகள் மீண்டும் நேராதவாறு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். செயல்பட்டுப்பாருங்கள் வெற்றி நமக்கு ஒரு விழா எடுக்க நாள் குறிக்கும்.

“
எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள்
எண்ணங்களை மாற்றினால்
வாழ்க்கையை மாற்றலாம்!

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H