வேலைநிறுத்தம் தொடரும்... தொழிற்சங்கங்கள் உறுதி!!
ஊதிய
உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்
தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற
உத்தரவு ஒருதலைபட்சமானது என்றும், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும்
தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.உரிமைகளுக்கான போராட்டம்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்
தொடரும். போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை இருக்கத் தான் செய்யும்,
அதற்காக எங்களின் உரிமைகளை விட்டு கொடுக்க முடியாது.
கடந்த
10 ஆண்டுகளாக தொழிலாளர் பணத்தைத் தராமல் இழுத்தடிக்கும் அரசுக்கு எதிராகத்
தான் போராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற
கேள்வியை அரசை நோக்கி தான் கேட்க வேண்டுமே தவிர, ஊழியர்களை
வேலைநிறுத்தத்திற்கு காரணம் சொல்லக் கூடாது என்று தொழிற்சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.







