பள்ளியில இருக்கிற பெரிய தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்துல இருந்து வெளியேற தண்ணீ எப்படி பாத்தாலும் காகாணி பாயும் போல... பள்ளிய சுத்தியிருக்கிற செடிகளுக்கு விட்டது போக ஏகப்பட்ட தண்ணி வீணாவது மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது.
தோட்டம் போட்டு பாய்சலான பள்ளியில இடமில்ல. என்ன செய்லானு யோசிச்சப்பதா.. பள்ளிக்கு பின்னாடி இருக்கிற நிலத்த குத்தகை எடுத்தா என்னனு தோனிச்சி...
நிலத்து உரிமையாளர் திரு. ஏழுமலைய பார்த்து கேட்டப்ப எதுவேணா செய்துகங்கனு அவுரும் சம்மதிச்சது ரொம்ப சந்தோசமா போச்சி..
ரொம்ப வருசமா நம்மாழ்வார் ஐயாகிட்டையும், ஜுரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர்கிட்டையும் கற்றுக்கொண்ட இயற்கை விவசாயத்த, பசங்களுக்கு ஒரு மாதிரி தோட்டம் அமைச்சி கத்துகொடுக்கனுன்ற ஆசைக்கு பெரிய தீனிபோட்டமாதிரி இருந்திச்சி.
குத்தகைலா பெருசா ஒன்னுமில்ல விளையருதுல பங்கு மட்டும் தா.
பள்ளி முடிஞ்சி, நம்ம சுற்றுச்சூழல் மன்றம் சார்பா தினம் ஒரு வகுப்புக்கு(6,7,8) விவசாயப்பாடவேளைனு ஒதுக்கி அரை மணி நேரம், நம்மாழ்வாரின் இருமடி பாத்தி, நவீன சொட்டுநீர் பாசனம்,தெளிப்புநீர் பாசனம், மூடாக்கு முறை, ஊடுபயிர், மற்றும் ஜீவாமிர்தம், மூலிகை பூச்சிவிரட்டிகள்னு கத்துகிட்டு, முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கை விவசாயத்தாலேயே கடந்த ஒரு மாசமா நம்ம பசங்க உருவாக்கி இருக்கிற, பாரதி கனவு கண்ட *காணிநிலத்தோட்டத்தின்* முதல் அறுவடை(ஊடு பயிர் மட்டும்) இன்னிக்கி சிறப்பா திருவிழாவா கிராம பெரியோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் கரங்களால் நடந்தது.
அவரை,கொத்தவரை,வெண்டை,பீன்ஸ், சிறுகீரை, அரைகீரை,தண்டுகீரை,புளிச்சகீரை குறிப்பா முள்ளங்கி அரை டன்னுக்கு விளைஞ்சிட பள்ளிகுடத்துல படிக்கிற பசங்க 160 பேருக்கு மட்டுமில்ல, வண்டியல எடுத்துகிட்டு போயி வீடு தோறும் இயற்கை விவசாயத்துல விளைஞ்சது சாப்பிட்டு பாருங்க, நீங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கனு சொல்லி, நம்ம சுற்றுச்சூழல் மன்ற பசங்க ஊர் பூரா இலவசமா கொடுத்து பெரிய பிரச்சாரமே பண்ணி பூட்டானுங்க...
*வீடு தோறும் கழிப்பறை, வீதிதோறும் மரங்கள்,காடுதோறும் இயற்கை பண்ணையம்* என்ற பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் இலக்கை
நோக்கி தொடர்ந்து பயணிக்கிறோம்.
*மண்ணும் மனிதனும் மலடாகாமல் காக்க* இயற்கை விவசாயம் செய்வோம்..
செய்ய வைப்போம்...
*நன்றி... **
திரு. *ஏழுமலை* நில உரிமையாளர்.
*சுற்றுச்சூழல் மன்றம்*,
*ஊ.ஒ.ந.நி.பள்ளி.*
*பள்ளிகுளம்.*











