ஒரு ஏழை.
பொருட்செல்வம் வேண்டி இறைவனிடம்
தவமிருந்தான்.
அவன் முன் இறைவன் தோன்றி என்னவரம் வேண்டும் என்றார்.
எனக்குப் பணக்காரனாவதற்குபணம் வேண்டும் என்றான்.
சரி,
இதை வைத்துக்கொள் என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார்.
அவன் அதற்கு நான் பணம் கேட்டால் தடியைத்தருகின்றாயே என்றான்.
இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால்
தங்கக் காசுகள் ஒருஆயிரம் வரும்.
அதுபோல எப்பொழுது வேண்டுமென்று
நினைத்தாலும்,
அப்பொழுதெல்லாம்தட்டினால் ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும்.
ஆனால் ஒரு நிபந்தனை.
உனக்கு கோபம் வரக்கூடாது.
அப்படி வந்தால் தடி உன்னைவிட்டுப் போய்விடும்.
ஜாக்கிரதையாகக்
கோபம் மட்டுமில்லாமல் இருந்தால்
எப்பொழுதும் உன்னிடமே இருக்கும் என்று சொல்லி மறைந்துவிட்டார்.
அதுபோல ஒருமுறைத் தட்டினான்.
ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன.
அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு
வீட்டிற்கு வரும்பொழுது
எதிரே ஒரு சந்நியாசி வந்தார்.
என்னப்பா எங்கே போய் வருகிறாய் என்று கேட்டார்.
நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக்
காட்டினான்.
அப்படின்னா இப்ப தட்டு பார்க்கலாம்? என்றார்.
உடனே இதோ பாருங்கள் தட்டுகிறேன் என்று தட்டினான்.
அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது.
அதையும் எடுத்துக்கொண்டான்.
இதைப் பார்த்த சந்நியாசி,
இதேபோல் எப்பவும் வருமா? என்றார்.
நாளைக்குத் தட்டினால் கூடவா?
ஆமாம் என்றான்.
இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?
ஆமாம் என்றான்.
ஒருவருடம் கழித்துத் தட்டினால் கூடவா? என்றார்.
ஆமாய்யா,போய்யா சும்மா உயிரை எடுக்காதே போய்யா என்று
கோபக்கனல் முகத்தில் தெறிக்கப் பேசினான்.
கையிலிருந்த காசுகளும்,தடியும் மறைந்துவிட்டது.
சோதிக்க வந்த இறைவனும் மறைந்தார்.
நீரில் விளைந்த மின்சாரத்திற்குநீரேதான் விரோதி.
கல்லுக்குள் தேரையும்,
கனிக்குள் புழுவையும்,
நெல்லுக்குள் பதரையும்,
சொல்லுக்குள் தீமையும்,
நல்ல மனிதர்களிடம் சினம் இருக்கத்தானே செய்கிறது.
இருளைக்குறை சொல்லிக்கொண்டே இருப்பதனால் என்ன பலன்?
அதை அகற்றும் ஒளியைத் தரும் இறைவனை நாடிச் செல்லுங்கள்.
ஒளி வரும். இருள் போகும்.