புதுடில்லி: மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக, மாவட்டந் தோறும், சமூக ஊடக மையங்களை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
▪சமூக ஊடகங்களில் மக்கள், தங்கள் கருத்துக் களை அதிக அளவில் பகிர்ந்து கொள்வதால், அவற்றை தொகுத்து,அவற்றின் அடிப்படையில்அரசின் திட்டங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது.மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் கீழுள்ள ஒலிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் நிறுவனம், இதற்கான டெண்டரை கோரியுள்ளது.
▪நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் வரும் செய்தி களை தொகுத்து, அவற்றின் அடிப்படையில் அறிக்கைகளை தயாரிக்கும் கம்ப்யூட்டர் சாப்ட் வேரை உருவாக்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
▪சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வரும் செய்திகளைதொகுத்து வழங்க, மாவட்டந் தோறும் சமூக ஊடக மையங்கள் அமைக்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் பரவலாக பேசப்படும் செய்திகள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மக்களின் கருத்து, சமூக ஊடகங்களில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த கருத்து மற்றும் விமர்சனங்கள் ஆகியவற்றை அந்த மையங்கள் தொகுக்கும்.இவ்வாறு மாவட்டந்தோறும் தொகுக்கப்படும் தகவல்கள் அனைத்தும் தேசிய அளவில் தொகுக்கப்படும்.இதற்கான சாப்ட்வேர் தயாரிக்க, தற்போது டெண்டர் கோரப்பட்டு உள்ளது







